Pages

Sunday, May 28, 2017

பொடா சட்டம் - "அது ஒரு பொடா காலம்" - சுப.வீரபாண்டியன்

அது ஒரு பொடா காலம் ..... பொடா சட்டத்தினால் கைதியான சுப.வீரபாண்டியன் எழுதிய புத்தகம் இது.

2002ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் புரிதல் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பொருட்டு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வன்னியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பரபரப்பாக பேசபட்ட அந்த பேட்டியை தமிழ் முழக்கம் சார்பில் திறனாய்வு செய்து பேசியதற்காக தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள்  இயக்கத்தை ஆதரித்து பேச குற்றத்திற்காக சுப.வீரபாண்டியன் கைது செய்யப்பட்டார். இவரோடு புதுக்கோட்டை பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சுப.வீ அவர்கள் கைதாகி ஒன்றரை ஆண்டு காலம் சென்னை மத்திய சிறைசாலையில் இருந்தார். அவர் இருந்த ஒன்றரை ஆண்டு கால அனுபவத்தை தான் இந்த புத்தகத்தின் மூலம் பதிவு செய்கிறார்.

பொடா சட்டம் (POTA - PREVENTION OF TERRORIST ACT) 2002ல் கொண்டு வர பட்டது. 2002ல் கொண்டு வரபட்டதாயினும் இந்தியா நாட்டிற்கு அதொண்ணும் புதிதல்ல. பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளை அடிப்பது போல் 200 வருட ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் அரசும் பிறகு இந்தியா அரசும் இதே போன்ற பல சட்டங்களை கொண்டு வந்தன. பஞ்சாப் மாநிலத்தில் ரத்தம் படிந்த படுகொலை சம்பவமான ஜாலியன் வாலாபாக் சம்பவமும் பொடா சட்டம் போன்ற சட்டமான ரௌலட் சட்டத்தினால் தான் நடத்த பட்டது. இதே போன்றவை தான்  D.I.R. - DEFENCE OF INDIAN RULES சட்டம், MISA - MAINTENANCE OF INTERNAL SECURITY ACT சட்டம் மற்றும் TADA - THE TERRORIST AND DISRUPTIVE ACTIVIES PREVENTION ACT சட்டம் ஆகியவையும். இவைகளின் மலிவு விலை பதிப்பு தான் பொடா சட்டமும் தான் என்கிறார் ஆசிரியர்.

சப.வீ அவர்கள் தனது அனுபவத்தினூடே சிறைசாலையின் அரசியலையும் அதிகார வர்க்கத்தின் முகத்தையும் பதிவு செய்கிறார்.

ஒரு இயக்கத்தை ஆதரித்தும் பேசிய ஒரு செயலுக்காக அதிபயங்கர கைதிகள் அடைக்கபடும் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்க படுகிறார். ஏன் அப்படி என்று கேள்விகள் என்னுள் எழ, அன்றைய ஆட்சி காலத்தை கணக்கில் கொண்டு பார்த்தால் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது ஏன் அவரை ஒரு பயங்கரவாதியாக சித்தரிக்க முயன்றார்கள் என்று.

வேறொரு இடத்தில் சிறை மொழி என்ற சிறைசாலைக்குள் பயன்படுத்தபடும் சில வார்த்தைகள் பற்றி சொல்கிறார். ஆல்டி, டர்க்கி, ரைட்டன், படி போன்றவையே சிறையின் புதிரான நிலையை தெரிந்துகொள்ள உதவுகிறது.

தனிமையில் தான் கவிதைகள் பிறக்கிறது என்று அடிக்கடி சொல்லபடுவதுண்டு. அதே போல் சுப.வீ அவர்களும் பல இடங்களில் கவிதைகள் எழுதியதாக சொல்லி அவற்றை பகிர்ந்து கொள்கிறார்.

அப்படி ஒரு இடத்தில்

"உறையிலே கிடக்கும் வாளாய்
ஓராண்டும் தாண்டி வாழ்க்கை
சிறையிலே கழிந்த போதுன்
சிந்தனை உணர்ச்சி யாவும்
உறைந்திடல் உண்டோ ? மேலும்
உரம்பெறுன் ஊக்கம் கூடும்
மறையுமோ கதிரின் வீச்சு
மழைதரும் மேகத் தாலே ?" என்று கவிதை எழுதுகிறார். அதை அவருடன் இருந்த ஈரோடு  கணேசமூர்த்தி அவர்களிடம் பகிர்ந்து கொண்ட பொழுது .... அதற்கு அவர் நானும் எதோ எழுதுவேன் என்று சொல்லி

"ஆண்டதமிழ் அடிமை விலங்கு ஒடியுமெனில்
ஆண்டென்ன ஆண்டு ஆயுளுக்கும் தயார்" என்ற கவிதையை ஈரோடுகாரர் எழுதி காட்டும் பொழுது சுப.வீவின் கவிதை வெட்கபட்டு கொள்கிறது.இது போன்ற மனதை தொடுகிற இடங்களுமுண்டு.

மேலும் கலைஞர் அவர்களின் முயற்சியால் அன்றைய மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மூலம்   பொடா சட்டம் குறித்து கொடுத்த வாக்குமூலத்தில் திருத்தம் கொண்டு வந்தது, அந்த திருத்ததின் மூலம் சுப.வீயும் அவரை சார்ந்தோரும் சிறைசாலையை விட்டு வெளியே வர முடிந்தது என்பதினை படிக்கும் பொழுது புத்தகத்தின் ஆசிரியர் இந்த பகுதியை இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஆனால் இதை பற்றி கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் இதை பற்றி விரிவாக எழுதி இருக்காராம்.நெஞ்சுக்கு நீதியை படிக்க வேண்டிய லிஸ்ட்டில் சேர்த்துவிட்டேன்.

மேலும் பல தகவல்கள். எல்லோரும் படிக்க ஒன்று.


குறைகள் என்று பார்த்தோமானல் நிகழ்வுகள் பற்றிய ஆழமான விசாரணை இல்லை.


Related Posts with Thumbnails