Pages

Saturday, January 2, 2016

2015 - மறக்க முடியாத நாட்கள்



2015ஆம் வருடத்தில் மறக்க முடியாத நாட்கள் என்று பார்த்தால்.... சென்னை பேரிடரின் பொழுது தொடர்ந்து இரண்டு நாட்களாய் பெய்த மழையினால் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணனின் குழந்தைகள் ரித்தி & குகன் பிறகு நானும் என் மனைவியும் எல்லோரும் வெளியே எங்கும் செல்லாமல் ; மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு ஆகியவற்றின் இணைப்பு இல்லாததால் ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் அடித்து கொண்டு பேசி கொண்டு நேரத்தை கடத்தினோம்.

அந்த இரண்டு நாட்களும் வெளி உலகத்தில் என்ன நடக்கிறதே என்று தெரியவில்லை.

அம்மாவும் அப்பாவும் குழந்தைகள் தூக்க ஒருத்தர் மாற்றி இன்னொருத்தர் விசிறி கொண்டு இருந்தனர்.

நானும் என் அண்ணனும் இப்படி ஒன்றாய் வீட்டில் வெளியே எங்கும் செல்லாமல் இருந்து இருபது வருடங்களாகி இருக்கும்.

குழந்தைகள் விழித்து கொண்டு இருக்கும் போது அவர்களுக்கு விளையாட்டு காட்டி கொண்டு நான் நேரத்தை கடத்தினேன்.

அண்ணியிடமும் என் மனைவியிடமும் "இவங்க இரண்டு பேரும் சின்ன வயசுல என்னா அட்டூழியம் பண்ணி இருக்காங்க தெரியுமா ..." என்று அம்மா எங்களின் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றினார்.

நானும் அண்ணனும் வழக்கம் போல் இந்திய தேசத்தின் பெருமைகளை பேசி கொண்டு இருந்தோம்.

இரண்டாம் நாள் மாலை மழை கொஞ்சமாக குறைந்த மாதிரி இருக்கவே, ஆபீஸ் விஷயமாக நெட் பாக்க போறோம் என்று வீட்டில் பொய் சொல்லி விட்டு பெருங்களத்தூர் ரயில்வே கேட் அருகிலுள்ள டீ கடையில் பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு வந்தோம். உண்மையை சொல்லி இருந்தால் வெளிவே விட்டு இருக்க மாட்டார்கள். அங்கு இருந்து வீட்டிற்கு வரும் பொழுது சிப்ஸ் கடையில் சுடசுட பக்கோடா போட்டு கொண்டு இருந்தார்கள் வாங்கலாம் என்று அண்ணன் சொல்ல, நான் அங்கு வேண்டாம் என்று வேறு கடைக்கு கூட்டிகொண்டு போனேன். அங்கு பக்கோடா சுடசுட இல்லையென்பதால் வீட்டுக்கு வந்துவிட்டோம்.

அப்பாவிற்கு பேத்தி கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பொறுமையாக சொல்லி கொண்டு ..."thaththaa u don't know English ..." என்று நற்பெயரை வாங்கி கொண்டார்.

அண்ணியும் என் மனைவியும் "உங்களுக்கு இது தெரியுமா அக்கா, உனக்கு தெரியுமா ..." என்று பாசமழை பொழிந்து கொண்டனர்.

மூன்றாம் நாள் மின்சார தொடர்பு, இணைய மற்றும் செல்போன் சிக்னல் கிடைத்துவிடவே, வீட்டில் எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினோம் :

1 comment:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உண்மைதான். அந்த நாட்களில் தாயம் பல்லாங்குழி என்று சிருவயஹ்டு விளையாட்டுக்களை விளையாடினோம்.
//மூன்றாம் நாள் மின்சார தொடர்பு, இணைய மற்றும் செல்போன் சிக்னல் கிடைத்துவிடவே, வீட்டில் எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினோம்//
இயந்திர வாழ்க்கைக்கு திரும்பினோம் என்று சொல்லலாம்

Related Posts with Thumbnails