Pages

Sunday, May 24, 2015

33 வயதினிலே....

33 வயதில் என்ன நடக்கும் ???

பதின்ம வயதில் கனவு கண்டு, அக்கனவிலேயே வாழ்ந்து அக்கனவு மாதிரியே தான் வாழ்க்கை அமையும் என்று நம்பி கொண்டு அக்கட்டத்தை கடந்து வந்திருப்போம்.

இருபத்தேழு வயது வரை இருபதுகளில் கனவு கண்டத்தை கண்டத்தையும் லட்சியமாக கொண்டு அதனை நோக்கி வாழ்ந்திருப்போம். 

முப்பதுகளை நெருங்குகையில் மனது நம்மை கேட்காமல் மற்றவர்களோடு நமது பொருளாதார நிலையை ஒப்பீட்டு அத்தகைய பொருளாதார நிலை இல்லாததை கண்டு தாழ்வு மனப்பான்மை கொள்வோம்.

முப்பத்தை கடக்கையில் இது தான் உலகம், இது தான் நீ செய்ய வேண்டியவை என்று நமது லட்சியத்தை கனவுகளையும் கலைத்துவிட்டு ஏதோ ஒன்றை நோக்கி வாழ்க்கை நம்மை ஓட வைக்கும். ஒப்பீட்டளவில் நம் மனது அடிக்கடி ஏன் இப்படி இருக்கிறோம் ?? இது தான் உன் லட்சியமா என்று கேள்வி கேட்கும். 

அப்பொழுது நினைத்தாலும் ஒரு காலத்தில் கனவு லட்சியம் என்று சொல்லி கொண்டு இருந்தவற்றை நோக்கி செல்ல முடியாது. லட்சியத்தையும் கனவையும் பொருளாதார தேடலில் எங்கையோ தொலைத்து இருப்போம். 

முப்பதுகள் நமக்கு பழக்கம் இல்லாத வாழ்க்கை ஒன்றை பழகி வாழ வைக்கும். குடும்ப பேச்சு, மன நெருக்கடி எல்லாம் சேர்ந்து அந்த வாழ்க்கையை நம்மை வாழ வைக்கும்.

காசு பணத்தை முன்னை காட்டிலும் அதிக கவனத்தோடு செலவு செய்வோம். 

நம் மீது காதல் கொண்ட பெண்ணிற்காக சமுகம் நிர்ணயம் செய்த வெற்றி என்ற கோட்பாடை நோக்கி ஓட ஆரம்பித்திருப்போம். 

நம்மை பலர் பாராட்டும் பொழுது ஒரு சின்ன புன்னகையோடு அதனை கடந்து செல்வோம் 33 வயதில். ஆனால் பால் விலை ஏற்றமடைய போவதை கண்டு கவலை கொள்வோம். எந்த கடையில் காய்கறிகள் விலை குறைச்சலாக கிடைக்குமென்று தேடுவோம். ஆசைகள் குறைந்து தேவைகள் அதிகமாகி அதற்காக செலவழிக்க ஆரம்பிப்போம்.

உடல் வலு போய், மூளை வலு மன வலுவை நம்ப ஆரம்பித்து இருப்போம். ஏனென்றால் இப்பொழுது வயது 33 ஆகி இருக்கும். 

எனக்கும் இப்பொழுது 33 வயது. 

No comments:

Related Posts with Thumbnails