Pages

Tuesday, April 13, 2010

காதல் கவிதைகள் -6



போலியான இன்பங்களைக் கொண்டு

இல்லாத சந்தோஷ தருணங்களை கருவில் உருவாக்கி

மனதளவில் சோகமும் சந்தோஷமும் மாறி மாறி

வந்தக் கொண்டே ; நினைவுகளுடன் நடந்துக் கொண்டிருக்கும் பொழுது

என் வாழ்வின் வசந்தக் கால தேவதை : சிறகு ஒடிந்து

பறக்கவும் திறனில்லாமல் வேடனின் அம்பு சொற்களுடன்

வாழ்ந்து கொண்டே இறந்து கொண்டும்

சுவாசத்தை எண்ணிக் கொண்டும்

மாலை வெயில் வேர்வைகளுடன் அவள் வீதியில்

அவளுடைய கணவன் ; என் பார்வையில் அந்நியனாய்

ஒரு நொடி பார்வை பரிமாற்றத்தில்

விரும்பி ஏற்று கொண்ட ஏமாற்றத்தின் நினைவுகளின் வலி

எனக்கு அவள் கண்களில்
முதுமை ; பத்து வருடங்கள் முன்பு காதலாய்

என்னை காதலித்தவை அவை அல்ல.

சில குழப்பங்களுடன் போராட்டம்
அவள் இவளா இவள் அவளா என்றெல்லாம்
கேள்விகள் வார்த்தைகள் காணாமல் போன கவிதை போல்.

தேவதைக்கு சிறகு இருந்த இடத்தில் சுமைகளுடன் சோகங்கள் .
முடியாமலும் முடிவில்லாமலும்
சிறு சிறு உறவுகள் வாழ்வில் வருவது ஏன் ?
ஓர் காலத்தில் சுகமாய் இருந்த காதல், இன்று சுமையாய் மாறியதேன்
பல குழப்பங்களுடன் முடிக்கிறேன் இந்த கவிதையை

4 comments:

மதுரை சரவணன் said...

குழப்பமாக இருந்தாலும் அருமை. வாழ்த்துக்கள்

தாரணி பிரியா said...

//முடியாமலும் முடிவில்லாமலும் சிறு சிறு உறவுகள் வாழ்வில் வருவது ஏன் ?//

intha line romba pidichu irukku mayvee

கார்க்கிபவா said...

என்னப்பா? கோழி அப்டேட்ஸ தேடி வந்தேன்

ஹேமா said...

வாழ்வின் யதார்த்தத்தை உணர்வாய் கோர்த்து கவிதை வடிவம் தந்திருக்கிறீர்கள் மேவீ.

முன்னையவைகளும் பார்த்தேன்.பாராட்டுக்கள்.உங்கள் தமிழ் எழுத்துக்களில் இப்போ நிறையவே முன்னேற்றமும் கூட.வாழ்த்துக்கள்.

சித்திரைப் புத்தாண்டுக்கும்கூட.
வாழ்வில் நல்லது நடக்கட்டும் இந்த ஆண்டில்."காதலைச் சொல்ல நேரமில்ல"ன்னு சொல்லியிருக்கீங்க.
சொல்லிடுங்க சீக்கிரமா !

Related Posts with Thumbnails