Pages

Thursday, February 25, 2010

கலவை

எனக்கு 49 வயதில் இறக்க வேண்டும்ன்னு ஆசையா இருக்கு. அது ஏன்னு தெரியல சின்ன வயசில் இருந்தே இப்படி ஒரு எண்ணம். எனக்கு இறப்பை கண்டு பெரிய அளவில் பயம் ஒன்றுமில்லை ஏனென்றால் நான் என்னுடைய பிறப்பை பெரியதாக கொண்டாடுவது இல்லை. யார் ஒருவன் அவனது பிறப்பை பற்றி பெருமிதம் கொள்கிறானோ அவனுக்கே இறப்பை பற்றிய பயம் அதிகமாக இருக்கும். நாம் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டே தான் வாழ்கிறோம். நாம் பிறந்ததே இறப்பதற்கு தான். அதனால் ஆணவம் இல்லாமல் மனிதனாய் வாழ பழகி கொள்ளுங்கள்.

= = = = = = = = = =

THE SEVENTH VOYAGE OF SINBAD ....1958 லில் வந்த படம். FANTASY வகைறவை சேர்ந்தது. கதைன்னு ஒன்னும் பெருசா இருக்காது. ஆனால் இதில் வரும் மாயஜால காட்சிகளுக்காகவே ஒரு முறை பார்க்கலாம். அதுவும் அந்த காலத்திலையே குறைந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டு சிறந்த முறையில் ANIMATION காட்சிகளை உருவாக்கி உள்ளார்கள். ஒத்த கண் ராட்சசன், அடிமை டிராகன் , ஒரு அடி உயர இளவரசி என்று உங்கள் வீட்டு குழந்தைகளின் ரசனைக்கு ஏற்ற படம்.

இந்த படத்தின் இன்னொரு விஷயம் என்னவென்றால் எப்பொழுதும் அலாவுதீன் கையில் இருக்கும் அற்புத விளக்கை சிந்துபாத் கையில் தந்து இருக்காங்க. மேலும் ஜினியை ஒரு கதாபாத்திரமாக காட்டி இருக்காங்க, கடைசியில் ஜினி விளக்கில் இருந்து விடுதலையாகி மனிதனாய் மாறி சிந்துபாத் கப்பலில் சேர்ந்து விடுவார்..... (தினத்தந்தி சிந்துபாத் கதை முடிந்து விட்டதா ???)

= = = = = = = = = = =

சேத்தன் பகத் தனது அடுத்த கதை எழுத ஆரம்பிச்சிட்டாராம். வித்தயாசமான காதல் கதைன்னு ட்விட்டர் ல சொல்லி இருக்காரு. பார்போம். இவருடைய 2 STATES தான் நான் அதிகம் சிரித்துப்படி படித்த புத்தகம். அதில் ஒரு இடத்தில மாப்பிள்ளைக்கு மாமனார் பஞ்சகச்ச வேஷ்டி கட்டும் பொழுது ....ஒரு டயலாக் எழுதி இருப்பார் பாருங்க வாய்ப்பே இல்லை .......அவ்வளவு காமெடி.

= = = = = = = = = = =

BUSINESS LAW பற்றிய எளிய அறிமுகம் வேண்டுவோருக்கு RSN PILLAI and BHAGAVATHY இதே தலைப்பில் எழதிய புத்தகம் உபயோகமாக இருக்கும் .....என்ன படிக்க தான் கொஞ்சம் SCHOOL GUIDE மாதிரி இருக்கும்.

= = = = = = = = = =

இப்ப நான் படித்து கொண்டு இருப்பது ADAM SMITH (பொருளாதாரத்தின் தந்தை ... (தாய் கட்டாயம் அவரது மனைவியாக தான் இருக்க வேண்டும் ஏனென்றால் அவருக்கு சின்ன வீடு மற்றும் set up கள் இருந்ததாக குறிப்பு எதுவுமில்லை )) எழுதிய THE WEALTH OF NATIONS . ஏறக்குறைய மூந்நூறு வருஷங்களுக்கு முன்னாடி எழுதப்பட்டது. பொருளாதரத்தில் ஆர்வமுள்ள எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம் இது, ஆனால் ரொம்ப TECHNICALA இருக்கும். நான் இப்ப தான் பைசா வந்த கதையை படித்து முடித்தேன். அதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அவ்வளவு DRY .

இந்த புத்தகத்தை எனக்கு படிக்க தந்த ராஜேஷை பற்றி கொஞ்சமாவது சொல்லியாக வேண்டும். எந்த புது புத்தகம் வாங்கினாலும் அவர் படிக்குமுன் என்னை படிக்க சொல்லி தருவர்.(பிரியம் எல்லாம் இல்லைங்க..நான் தரும் இம்சை தங்காமல் தான் தருவாரு). இவர் இங்க நிறைய படிச்சிட்டு, இங்கிலாந்துக்கு போய் இன்னும் அதிகமாக செலவு செய்து இன்னும் அதிகமாக படிச்சிட்டு ....."என் திறமை முழுவதும் இந்தியாவுக்கு தான்" அப்படின்னு வீரமா வந்தாரு..... வந்த மூன்றே மாதங்களில் ரொம்ப நொந்து போய் "மேவி நான் இந்தியாவுக்கே வந்து இருக்க கூடாது ...அங்கேயே இருந்திர்க்கனும்....." சொல்ல (புலம்ப) ஆரம்பிச்சிட்டாரு .......

= = = = = = = = = =

சுஜாதா ...எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். முதலில் இவர் சினிமாவுக்கு எழுதும் வசனங்களை கேட்டு தான் இவரது ரசிகர் ஆனேன். பிறகு பொதிகையில் (பத்து வருடங்களுக்கு முன்) " கொலை உதிர் காலம் " தொடராக வந்த பொழுது தான் இவர் என் ஹீரோவனர். இவரது "ஸ்ரீ ரெங்கத்து தேவதைகள் " ....CLOSE TO MY HEART .

சமீபத்தில் தாரணி அக்கா சொன்னதினால் "பிரிவோம் சந்திப்போம்" படித்தேன் (உபயம் : ராஜேஷ் ) ...அப்பிடியே உருகி போயிட்டேன். எனக்கு BRANDING மேல் ஆசை வந்ததிற்கு இவர் எழுதிய ஒரு கட்டுரை தான் காரணம் .

= = = = = = = = = =

கொஞ்ச நாள் முன்னாடி எனது சொந்தக்காரர் ஒருத்தர் நித்யானந்தரின் "ஜீவன் முக்தி" பரிசாக தந்தார் ( எங்க குடும்பத்தில் இருக்கிற எல்லோருக்கும் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு, என்னை தவிர).... நல்ல ENGAGING யாக தான் எழுதிருக்கார். அதிலும் ஆன்மீகவாதிகள் "முக்தி பக்திக்கு அடிப்படை" என்ற CHAPTERயை கட்டாயம் படிக்க வேண்டும். (ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாதவர்கள் பின்னூட்டத்தில் கிண்டல் அடிக்கவும்)

= = = = = = = = = =

வர வர குமுதத்தை படித்தாலே ஏதோ இன்டர்நெட்யை படிப்பது போல் உள்ளது . இல்லாட்டி அவங்க தருகிற மேட்டர் எல்லாம் ஏற்கனவே படித்தது போல் இருக்கு. விகடனுடன் போட்டி போடுவதை நிறுத்தி விட்டு .....இவர்களின் CONTENT மேல் கவனத்தை செலுத்தினால் நல்ல இருக்கும்.

அதே மாதிரி தான் "புதிய தலைமுறை" யும், வர வர அவர்களின் CONTENT யை பார்த்தாலே ரொம்ப குழம்பி போய் இருக்காங்கன்னு தெரியுது. வரும் காலங்களில் இதுவும் இன்னொரு வார இதழ்யாகி விடுமோ என்று கொஞ்சம் யோசனையாக இருக்கு.

= = = = = = = = = =

கார்க்கி ரசிகர் மன்ற முதலாம் ஆண்டு கூட்டம் போன வாரத்தில் வெற்றிக்காரமாக நடந்தது. கூட்டத்தில் பேசிய "கோவை கார்க்கி ரசிகர் மன்ற" தலைவர் பிரபு அவர்கள் ட்விட்டரில் கார்க்கி எழுதும் "தோழி அப்டேட்ஸ்" மிகவும் ரசிப்பதாய் சொன்னார். டெல்லி ரசிகரான அப்பாஸ் கார்க்கி எங்கே இலக்கியவாதியாக மாறி விடுவரோ என்ற தனது பயத்தை வெளிக்காட்டினர். (மேலும் விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்க)

= = = = = = = = = =

கோவா படத்தை பார்த்தப் பிறகு பியாவை காதலிக்காமல் இருக்க முடியவில்லை. த்ரிஷா சொன்ன மாதிரி கனவுல வரல, அதனால் அவங்களை கை விட்டாச்சு (ONLY SINGLE MEANING ) ..... ஆனாலும் நமீதா தான் என் கனவுக் கன்னி ...அதில் எந்த வித மாற்று கருதும் இல்லை.

= = = = = = = = = = =

கார்த்திகை பாண்டியன் அவர்கள் காதலர்கள் தினத்தின் போது எனக்கு போன் பண்ணினாரு ..... நான் ரொம்ப பயந்துப் போயிட்டேன், நான் அந்த மாதிரி ஆளு இல்லைங்கன்னு சொல்லலாம்ன்னு பார்த்தேன். நல்ல வேளையாக வாழ்த்துக்களை மட்டும் சொன்னாரு

வானவில் கார்த்திக் கேட்டு கொண்டதின் பெயரில் நானும் ட்விட் பண்ண ஆரம்பிச்சாச்சு.

= = = = = = = = = =

பிகு : இந்த பதிவில் இடைச் சொற்க்களை நான் அதிகம் உபயோக படுத்தவில்லை, அதனால் இலக்கியவாதிகள் என்னை மன்னிக்கவும்

13 comments:

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

எனக்கு 40 வயதில் என்று தோன்றும் ...

Unknown said...

//.. ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாதவர்கள் பின்னூட்டத்தில் கிண்டல் அடிக்கவும் ..//

:-))

ஒருசில இடங்களில் எழுத்துப்பிழை தெரியுதுங்க..

வால்பையன் said...

//யார் ஒருவன் அவனது பிறப்பை பற்றி பெருமிதம் கொள்கிறானோ அவனுக்கே இறப்பை பற்றிய பயம் அதிகமாக இருக்கும். //

தத்தவ எண்= 5432

நான் நாளைக்கே சாகத்தயார்!
ஆனா, தானா சாகனும்,
எவனும் கொல்லக்கூடாது!

வால்பையன் said...

//காபா அவர்கள் காதலர்கள் தினத்தின் பொழுது எனக்கு போன் பண்ணினாரு .....ரொம்ப பயந்து போயிட்டேன், நான் அந்த மாதிரி இல்லைங்கன்னு சொல்லலாம்ன்னு பார்த்தேன். நல்ல வேளை வாழ்த்துக்களை மட்டும் சொன்னாரு//

போன் பண்ண அவருக்கு நேரம் காலமே கிடைக்கலையா!?

அன்புடன் நான் said...

உங்களால.... 49 வயசுல சாக முடியாது.....

ஜமாலாலையும் ...40 வயசுல சாக முடியாது!!

என்னாலையும்...30 வயசுல சாகமுடியாது....

ஏன்னா.... கடந்த வயதில்... யாராலையும் சாக முடியாதுங்கோ!!

PPattian said...

ஒரே தொகுப்பில இவ்ளோ மேட்டர் எழுதி இருக்கீங்க.. சூப்பர் மேவீ..

ஹேமா said...

வாழ்க்கையை மிகவும் ரசிச்சு வாழறீங்க மேவீ.பொறாமையாவும் இருக்கு.விடுங்க சாவுன்னு ஒண்ணு எப்பவோ வரத்தான் போகுது.
வரப்போ வரட்டும்.

Maximum India said...

சுவாரஸ்யமான பதிவு.

வாழ்த்துக்கள்!

:)

மேவி... said...

@ ஜமால் : அப்படியா ......ஏன் அப்படின்னு சொல்ல முடியுமா

@ திருஞானசம்பத் : அப்ப கவர்ச்சி பதிவுன்னு சொல்லுங்க (பிழைகள் இனிமேல் வராதவாறு பார்த்துக் கொள்கிறேன்)

@ வால்ஸ் : நன்றிங்க

@ கருணாகரசு : சார் .....நான் சின்ன பையனுங்க

@ புபட்டியன் : தேங்க்ஸ் ...கலவைன்ன அப்படி தான்

@ ஹேமா : சரியாய் சொன்னிங்க

TAMIL said...

hai

TAMIL said...

hai

Vijay said...

\\எனக்கு இறப்பை கண்டு பெரிய அளவில் பயம் ஒன்றுமில்லை ஏனென்றால் நான் என்னுடைய பிறப்பை பெரியதாக கொண்டாடுவது இல்லை.\\
உங்க லாஜிக்கே சரியில்லை. இறக்கப் போகிறோம் என்று யாருமே அஞ்சுவதில்லை. நாம் இறப்பதால், நம்மை நம்பியிருப்பவர்களுக்கு எவ்வளவு நஷ்டம் என்பதால் தான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறோம்.

\\யார் ஒருவன் அவனது பிறப்பை பற்றி பெருமிதம் கொள்கிறானோ அவனுக்கே இறப்பை பற்றிய பயம் அதிகமாக இருக்கும். \\
இது வேணா ஒத்துக் கொள்ளலாம். நல்ல பாயிண்டு :)

\\நாம் பிறந்ததே இறப்பதற்கு தான்.\\
நாம் இறப்பதும் மீண்டும் பிறப்பதற்குத்தான். நீங்கள் இதை ஆன்மீகம், மத நம்பிக்கை அது இது என்று சொல்லலாம். நான் அதை Law of Conservation of Mass and Energy என்று சொல்வேன் :)

\\(ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாதவர்கள் பின்னூட்டத்தில் கிண்டல் அடிக்கவும்)\\
தனக்குள் வசிக்கும் கடவுளை உணராதவன் தான் கடவுளைத் தேடி அலைகிறான்.
அஹம் பிரம்மாஸ்மி :)

\\குமுதத்தை படித்தாலே ஏதோ இன்டர்நெட்யை படிப்பது போல் உள்ளது . இல்லாட்டி அவங்க தருகிற மேட்டர் எல்லாம் ஏற்கனவே படித்தது போல் இருக்கு. விகடனுடன் போட்டி போடுவதை நிறுத்தி விட்டு .....இவர்களின் CONTENT மேல் கவனத்தை செலுத்தினால் நல்ல இருக்கும்.\\
நான் வாரப்பத்திரிகைகள் படிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆச்சு. இணையதளத்தில் கூட படிப்பதில்லை. எல்லாமே சினிமா ஒரியண்டட் ஆகிவிட்டன.

\\ஆனாலும் நமீதா தான் என் கனவுக் கன்னி ...அதில் எந்த வித மாற்று கருதும் இல்லை.\\
நமீதாவைப் பார்த்தாலே சானல் மாற்றிடுவேன் :(

கார்க்கிபவா said...

ஹிஹிஹிஹி..இன்னைக்குதான் பார்த்தேன்ன்...

Related Posts with Thumbnails