Pages

Sunday, January 31, 2010

கலவை

எல்லோரும் போல் நானும் அவதார் படத்தைக் கொஞ்ச நாள் முன்னாடி பார்த்தேன் .... பல சயின்ஸ் தியரிக்களை கையாண்டு நல்ல எடுத்து இருக்காங்க.... அதில் முக்கியமாக படோர கிரகத்தில் இருப்பவர்கள் எல்லா உயிர் இனத்தோடும் தொடர்பு வைத்துக் கொண்டு எண்ணங்களை பரிமாறி கொள்வதாய் வருகிறது, இதை ENTANGLEMENT THEORY என்று சொல்வார்களாம்.




இதை பற்றி என் அம்மாகிட்ட சொன்ன பொழுது , அவங்க சித்தர்கள் கூட இதைப் பற்றி பாடி இருப்பதாய் சொன்னங்க ....

= = = = = =

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் .....கடைசில சோழர்களின் கோட்டையில் இருந்து ரீமா சென் தப்பித்து வரும் முன் அவங்க பயன்படுத்தும் தண்ணீரில் தன் விரலை வெட்டி அதிலிருந்து வரும் ரத்தத்தை கலந்து விடுவாங்க ..அதனால் அந்த தண்ணீர் விஷமாக மாறி விடுமாம்.....

இது அப்படியே சிவகாமியின் சபதத்தில் இருந்து செல்வா காப்பி அடிச்சு இருக்காரு. அதில் நாகநந்தி செய்வாரு, இதில ரீமா சென் செய்றாங்க.

= = = = = =

சமீபத்தில் ஹூணர்கள் பற்றி படிக்கும் பொழுது அவர்கள் நாடோடிகள் என்று தெரிய வந்தது. அவர்களை பற்றி மேலும் அறிய எதாச்சு INTERESTING யான புக்ஸ் இருக்கா ??? அப்படி இருந்த எனக்கு சொல்லுங்க.

= = = = = =

STAY HUNGRY , STAY FOOLISH ன்னு ஒரு புத்தகம். அருமையா இருக்கு. தமிழில் கூட மொழிபெயர்த்து வெளியிட்டு. அவசியம் எல்லோரும் படிக்க வேண்டிய நூல். IIM ல படித்த 25 வெற்றி பெற்ற வியாபார காந்தங்களின் (BUSINESS MAGNET ) கதை.

= = = = = =

கிரோம்பேட்டை. பணக்கார உணவு விடுதிகளின் அடுத்த டார்கெட் போல் இருக்கு. ஏற்கனவே ஹாட் சிப்ஸ் இருக்கு. இப்ப அடையாறு அனந்த பவன் வர போகுது. இவை இரண்டும் அமைந்து இருக்கும் இடங்களை பார்த்தாலே ; அவை அந்த பகுதியில் இருக்கும் RESIDENTIAL MARKET யை நம்பி வரவில்லை என்று தெரிகிறது.

= = = = = =

இப்ப வெண்ணிற இரவுகள் படித்துக் கொண்டு இருக்கிறேன். கொஞ்ச நாள் முன்னாடி MOUNT ROAD ல இருக்கிற ஒரு பழைய புத்தக கடையிலிருந்து வாங்கினேன். ரொம்ப கம்மியான விலை தான்.

இன்னும் பல உலக இலக்கியங்கள் அந்த கடைக்காரனிடம் இருந்தது. பார்க்க தான் எனக்கு டைம் இல்லை.

= = = = = =

உலக அளவில் மிகவும் பிரபலமான கொலை வழக்கு ......JACK THE RIPPER (LONDON 1888 ). இதில் என்ன விசேஷம் என்றால் கொலைகாரன் யாரென்று இது வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் யாராக இருக்க கூடும் என்ற விவாதங்களுக்கு மட்டும் குறைவில்லை. இன்னொரு விஷயம் .....உலகின் முதல் பிரபல சைக்கோ கொலைகாரன் இவன் தான்.

= = = = = =

"ஒரு யோகியின் சுயசரிதை " ......... தற்பொழுது படிக்கப் ஆரம்பிக்க போகும் புத்தகம்.

= = = = = =

BRAND AMERICA : THE MOTHER OF ALL BRANDS .......BRANDING ல ஆர்வம் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். எப்புடி அமெரிக்காவில் இருக்கும் கம்பனிகள் தங்களுடைய பிராண்டுகளை வெற்றி பெற செய்தது என்றும், அது எப்புடி ஒரு கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும் சொல்லுகிறது.

CASE STUDY என்றாலே கொஞ்சம் மொக்கைய தான் இருக்கும். அதனால் மொத்தமாய் படிக்க வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாய் படிக்கவும்.

= = = = = =

7 comments:

கார்க்கிபவா said...

வெண்ணிற இரவுகள், காதலர் தினத்திற்கு பரிசளிக்க சிறந்த பரிசென நேற்றுதான் ட்விட்டரில் சொல்லியிருந்தேன். எந்த கடைண்ணா? போலாமா?

எப்போ தமிழ்மணத்தில் இணைச்சிங்க?

சங்கர் said...

//கார்க்கி said...
எந்த கடைண்ணா? போலாமா?//

ரிப்பீட்டுகிறேன்

மேவி... said...

@ கார்க்கி : தேவி தியட்டர் பக்கத்தில இருக்கு ...தமிழ்மணத்தில் சேர்த்து ஒரு மாசம் கிட்ட ஆச்சு

@ சங்கர் : கார்கிக்கான பதிலை படித்து கொள்ளவும் :)))))..ஏன்ன ஒரே கேள்விக்கு இன்னொரு வாட்டி பதில் சொல்ல மாட்டோம் ..நாங்க எல்லாம் பயங்கர சோம்பேறி ல

தாரணி பிரியா said...

நிறைய படிக்கிறீங்க இலக்கியவாதி சொன்னது சரிதான் போல‌

கார்த்திகைப் பாண்டியன் said...

//தாரணி பிரியா said...
நிறைய படிக்கிறீங்க இலக்கியவாதி சொன்னது சரிதான் போல‌//

யாரு.. என்னங்க சொன்னது.. நம்ம மேவீயப் பத்தி?

மேவி... said...

@ தாரணி பிரியா : அடடா ......

@ கார்த்திகை : ஏன் ஏன் ஏன் ..அவங்க தனப்பா சொன்னாங்க

Anonymous said...

நீங்கள் அவசியம் ஜெயமோகனின் பனிமனிதன் படிக்க வேண்டும் , கிழக்கு பிரசுரம் .

Related Posts with Thumbnails