Pages

Tuesday, December 22, 2009

மேவி .....ஐ லவ் யூ

பெருங்களத்தூர் முதல் ரயில்வே கேட் வழியாக வந்து செந்தில்முருகன் கம்ப்யூட்டர் சென்டருக்கும் சைக்கிள் ஸ்டாண்டுக்கும் நடுவே போகும் படிகள் வழியாக வந்தால் என் அறைக்கு வரலாம். ரயில்வே ஸ்டேஷன்யில் இருந்து ஐந்து நிமிடங்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து கூடுதலாய் மூன்று நிமிடங்களாகும். என் அறைக்கு வருபவர்கள் சொல்லும் ஒரே குறை வாகனங்களை நிறுத்த இடம் இல்லாதது தான். இதற்காக எதிரில் இருக்கும் பிரதர்ஸ் பேக்கரி முன்பு நிறுத்துவிட்டு வருவார்கள். மாவு மில் முன்பு நிறுத்த, மில்லின் ஓனர் அனுமதிக்க மாட்டார்.

என் அறைக்கு வரும் வழி தான் கொஞ்சம் எப்ப-சப்பையாக இருக்குமே தவிர, அறை வசதியாக தான் இருக்கும். ஆனால் அதை நான் வைத்திருக்கும் லச்சணம் தான் பல் இளிக்கும். பொது குப்பை தொட்டி கூட என் அறையை விட கொஞ்சம் சுத்தமாக தான் இருக்கும். புத்தகங்கள் திறந்த படி இருக்கும், சுவரில் கலோசொபு தனமான போஸ்டர்கள் இன்னும் சொல்லி கொண்டே போகலாம். தனியாக தங்கும் வாலிபர்களின் அறை எப்புடி இருக்கும் என்று நான் ஒன்னும் புதிதாய் கிளாஸ் எடுக்க வேண்டியது இல்லை.

சரி, இனிமேல் தான் கதைக்குள் போக போகிறோம், இடைவேளை இல்லை. ரிலாக்ஸ்செஷன் வேண்டுவோர் பிரதர்ஸ் பேக்கரியில் எதாவது சாப்பிட்டு விட்டு வாங்க.(எனக்கு அங்கு அக்கௌன்ட் இல்லை).............................
சனிக்கிழமை.

மாலை நேரம்.

வழக்கம் போல் நான் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன். பொதுவாய் சனிக்கிழமை மாலை நேரங்கள் ஞாயிறு மாலை நேரத்தை விடவும் சுவாரசியம் அதிகமாக தான் இருக்கும். ஏன்னு என்று சொல்ல காரணங்கள் இல்லை தான், ஆனாலும் ஏதோ ஓன்று கிடைத்து விடும், அன்றைய மாலை பொழுதை நான் சுவாரசியமாக தான் அனுபவித்தேன் என்று நம்புவதற்கு.

அன்றும் அப்படி தான். சுவாரசிய பொழுதுகளை எதிர்நோக்கி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன், என்ன பார்த்தேன் என்று ஞாபகமில்லை, ஆனால் செல்போன் தோழிகள் அழைத்தால் பாட வேண்டிய அந்த பாட்டை பாடியது. பர்சனல் மொபைல் தான். ஆபிஷியல் மொபிலேயின் இயக்கத்தை நிறுத்தி வைத்து இருந்தேன்.

"டேய். என்னடா பண்ணிட்டு இருக்க ??"

கொஞ்ச நேர யோசனைக்கு பின் பூஜா தான் பேசுகிறாள் என்பதை டிஸ்பிளேவை பார்த்து தெரிந்து கொண்டேன்.

"ஒன்னும்ல்லா.... சும்மா தான் இருக்கேன்."

"ஏன்...புக்ஸ் படிக்கல ??"

"போர் அடிக்குது..."

"ம்ம்ம்"

"வேலை எதுவும் இல்லை...."

"ஓ..... அப்படின்னா, நான் ஒரு வேலை தரேன்...செய்."

"எனது ?"

"வந்து உன் ரூம் கதவ திற ..... நான் வெளியே நான் இருக்கேன்...."

மனிதர்களின் மனசை போல் தான் என் அறையும், வெளியே இருந்து பார்க்க நல்ல தான் இருக்கும். உள்ளே செம குப்பையாய் இருக்கும். சுலபத்தில் சுத்தம் செய்ய முடியாது. இது அந்த நேரத்தில் மண்டைல பல்பு எரிஞ்சுது.

சரின்னு கண்ணதாசன் மாதிரி "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ..." மனசில் பாடிகிட்டே கதவை திறந்தேன்.

அவள்.

கண்களில் எதிர்பார்த்த மாதிரி தான் அறை இருக்கிறது என்பது போல் ஒரு ஏளன பார்வை. சுவரில் இருக்கும் படங்களை பார்த்து கொண்டே வந்த அவள் ஒரு படத்தை பார்த்த உடனே,அவள் முகம் அஷ்ட கோணலாய் போனது. போன மாதம் ஒட்டின GANG BANG படம். என்ன சொல்லுறதுன்னு தெரியல ஆன மொத்தத்தில் என் மானம் டைடானிக் ஏறி கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் விருந்தோம்பல் தான் தமிழரின் SUN BATH என்று ......சாரி பண்பாடு என்று நினைவு வருவே நூட்லஸ் வைத்து தந்தேன். திருவள்ளுவர் பாடாத ஐட்டம் ஒன்றை அவளுக்கு தந்து விட்டேன் என்ற பெருமை.

(சே...கதை ரொம்ப மொக்கைய போயிட்டு இருக்குல ...PATTERN CHANGE )

ஜன்னல் வழியே வந்த காற்று நங்கள் இருவரும் அருகே ஏதோ ஒரு அவஸ்தையுடன் அமர்ந்து இருந்ததை கண்டு பிடித்தது. எதுவென்று தெரியவில்லை பேச்சு காதல், கல்யாணம், காமம் என்று திசை திரும்பிய பொழுது தான் நாங்கள் உணர்ந்தோம் எங்களுக்குள் பற்று இருப்பதை.

தனிமை தந்த சுகந்திரம்.....

மனதிற்கு தான் சமுக கட்டுப்பாடுகளெல்லாம். உணர்வுகளுக்கு அது இல்லை.

ஆனால் மனதும், உணர்வும் ஒரே இடத்தில் இணைந்து இருந்ததால் பிரச்சனை.

என்ன செய்வது என்று தெரியவில்லை.

பயம் ஒரு பக்கம், ஆசை ஒரு பக்கம். தனிமை ஒரு உளியை போல் காம உணர்வினை மேம்மேலும் செதுக்கி கொண்டு இருந்தது.

எதற்கு அவள் வர வேண்டும்.

அவளை நான் தடுக்கவில்லை. ஆனாலும் அவள் போகாமல்...... இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். அறிவு ஆணுறை வாங்கி விடலாமா என்று யோசிக்க ஆரமித்தது.

முத்தமிட அவள் உதடுகள் நோக்கி தவிப்புடன் என் உதடுகள் ......

ஆர்வம் வந்த பொழுது முன்னேறினேன். பயம் வந்த நேரத்தில் பின் வாங்கினேன்.
கட்டுபடுத்த முடியாத ஒரு நிலையில் கையை அவள் அருகே கொண்டு போனேன். என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை. கதவை திறந்து கொண்டு என் பக்கம் முதுகை காட்டிய படி சொன்னாள்.....

"நான் உண்......."

"ம்ம்ம்...எனது.." என்றேன் அவஸ்தையில்

"மேவி..ஐ லவ் யூ .....உன்னை கல்யணம் பண்ணிக்க ஆசை படுறேன்......"

பிறகு ஆணுறை வாங்க வேண்டிதாக போச்சு. ஒரு பெண் மனசுக்குள் வந்தால் எவ்வளவு வெளிச்சமாக, அவள் காட்டும் பரிசுத்த அன்பினால் தூய்மையாகும் மனம் போலானது என் அறையும், மனசும்.

சிரித்தபடி பெருங்களத்தூர் தெருக்களில் சுற்றினோம். பிறகு கோவிலுக்கு சென்றோம்.

தாம்பரம் போக எண்ணமில்லை. பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் இருக்கும்
..........
(ஒ..சின்ன தப்பு நடந்து போயிருச்சு ......இது கதையோட கடைசி பாகம்...... முதல் பாகம் இதோ கிழ இருக்கு)

மார்ச்,1999

XXX BOARDING SCHOOL

கொடைக்கானல்

"இப்ப LADIES HOSTEL க்கு போகாட்டி ....ஹால் டிக்கெட் உனக்கு கிடைக்காது ...."

நாளை +2 BOARD EXAM . கணக்கு முதல் எக்ஸாம்.

எனக்கு பயம இருந்துச்சு .......
தொடரும் .....

9 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

எஸ் ஜே சூர்யா குரூப்பா நீங்க‌
முத‌ல் பாக‌த்தையும் க‌டைசி பாக‌த்தையும் சொல்லிட்டு .......இன்னும் தொட‌ரும் வேற‌வா???????

க‌ரிச‌ல்கார‌ன் said...

எப்ப‌டி எல்லாம் யோசிக்க‌றாங்க‌ப்பா

வால்பையன் said...

//என் அறைக்கு வரும் வழி தான் கொஞ்சம் எப்ப-சப்பையாக இருக்குமே தவிர, அறை வசதியாக தான் இருக்கும். ஆனால் அதை நான் வைத்திருக்கும் லச்சணம் தான் பல் இளிக்கும். //

ரொம்ப நல்லவரா இருக்கிங்களே மேவி!

மேவி... said...

@ karisal : naan agmark nalla paiyanunga....kadhaikaga...summaa


@ vaals : thanks :)

அத்திரி said...

//மனிதர்களின் மனசை போல் தான் என் அறையும், வெளியே இருந்து பார்க்க நல்ல தான் இருக்கும். உள்ளே செம குப்பையாய் இருக்கும். சுலபத்தில் சுத்தம் செய்ய முடியாது.//

நிதர்சனம்

சங்கர் said...

நான் பக்கத்துல ஊரப்பாக்கத்துல தான் இருக்கேன், நேர்ல வந்து பேசறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா கொண்டு போய் கடைசியில கில்மாவா.. இதுல மொத பாகம், கடைசின்னு வேற குழப்பி இருக்கீங்க.. ஐயோ..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//பிறகு ஆணுறை வாங்க வேண்டிதாக போச்சு.//

எச்சூச்மி இதுல ஏதும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா?

மேவி... said...

@ aththiri : amanga

@ sankar : saringa

@ karthigai : trailorkke ippadinna.... main picture inimel thaan

@ sri : illainga

Related Posts with Thumbnails