Pages

Tuesday, December 1, 2009

தேவதையின் கை - 2

பாகம் - 1

================================================

"ஐய்யோ......." என்று அவள் அலறியது என் காதுகளில் கேட்டது. காயம் பட்ட விரலை பிடித்து கொண்டு இருந்தாள். வலியை விட அவள் என் கையை பிடித்து கொண்டுயிருக்கிறாள் என்ற நினைவே வலியை மறக்க செய்தது. அந்த நொடி ஓர் பெண்ணிடமிருந்து முதல் முறை காதல் கடிதம் வாங்கினது போல் உணர்ந்தேன். என் அறிவு மங்கி, மனம் வேலை செய்ய ஆரமித்தது. வார்த்தைகள் தங்களின் ஒலியை மறந்து வெறும் காற்றை மட்டும் வெளியேற்றி கொண்டு இருந்தது. அது என்ன வடிவங்களில் அவள் காதுகளில் கேட்டதோ தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து சிரித்த படியே ஏதோ சொன்னாள்.

(-)

விழுப்புரம் நெருங்கி கொண்டு இருந்தது நான் காதலில் விழுந்து ; அந்த நிகழ்வு சரித்திரமாகி கொஞ்ச நேரம் ஆகிருந்தது. அந்த அனுபவம் மீண்டும் கிடைக்க கதவின் வழியே கையை வெளியே நீட்டலாம் என்று தோன்றியது. ஒவ்வொரு பெண்ணிடமும் தாய்மை உணர்வு இருக்கிறது என்று என்றோ சதீஷ் சொன்னது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது தேவையில்லாமல் கூடவே சதீஷும் வந்தான். ஒரு பெண் பக்கத்தில் இருக்கும் பொழுது நண்பன் நினைவுக்கு வந்தால் எவ்வளவு பெரிய கொடுமை என்று உணர்ந்தேன்.


(-)

பிளாட்பாரத்தை பார்த்தேன். வலது பக்கம் பார்த்துவிட்டு இடது பக்கம் பார்த்தேன். தூரத்தில் டீக்கடை திறந்து இருந்தது.

டி மிகவும் சூடாக இருந்தது. இரண்டு கைகளில் கோப்பைகளை பிடித்து நடந்து கொண்டு இருந்தேன்.

இரண்டாம் விரல் பிறகு மூன்றாம் விரல் அதன் பிறகு நான்காம் விரல் மீண்டும் பழையபடி இரண்டாம் விரல் ; எப்புடி வைத்து பிடித்தாலும் சுடு பொறுக்க முடியவில்லை. கட்டை விரலை தான் மாற்றி வைக்க முடியவில்லை. அதனால் அதில் சுடு அதிகமாக தெரிந்தது.

ரயில் கிளம்பியது.


(-)



எதிர் மேல் பெர்த்தில் அவள்.

தூக்கம் வரவில்லை. வரவும் நான் விரும்பவில்லை. நச்சத்திரங்களை கொண்டு இருளில் வண்ணமயமாய் தெரியும் அவள் முகத்தில் வைத்து அழகிற்கு அழகு சேர்க்கலாம் என்று நினைத்த பொழுதில் அவள் அழகை கடன் வாங்கி நச்சத்திரங்கள் அழகாகி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் வந்துவிட வெறும் அவள் கண்களை பார்த்து கொண்டு இருந்தேன். அவை இரண்டும் என்னை பார்ப்பது போல் ஓர் பிரம்மை. பிரம்மை பிரம்மையாக இல்லாமல் நிஜமாக இருக்க கூடாத என்று ஆசை வந்தது.


(-)

எது அவள் மேல் காதல் கொள்ள வைத்தது....???? அவளது குணமா, அறிவா இல்லை என்றால் அவளது அழகா ???

அவள் என்னை பற்றி என்ன நினைக்கிறாள் ????



என்று சில எண்ணங்கள் அலை மோதியது தூக்கத்தில் நினைவிழக்கும் முன்பு.

(-)

ரயிலை விட்டு இறங்கி நின்று கொண்டுயிருந்த போதும் அவளை காணவில்லை. இறங்கும் முன்பு அவள் டாய்லட் சென்று இருப்பாள் என்று எண்ணி கொண்டேன் அப்பொழுது தான் உறக்கத்திலிருந்து எழுந்தபடியால்.

"பாதைகள் சுற்றிச் சுற்றிச் சென்று கொண்டிருந்தன. முன்னிரவில் ஜகஜ் ஜோதியாகப் பிரகாசித்த விளக்குகள் பல அணைந்து விட்டன. சில புகை சூழ்ந்து மங்கலான ஒளி தந்தன. ஆங்காங்கு பாதை முடுக்குகளில் தாதிமார்கள் படுத்தும் சாய்ந்தும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பி வழி கேட்க இஷ்டப்படாமல் வானதி மேலும் சென்று கொண்டிருந்தாள். அந்த அரண்மனைப் பாதைகளுக்கு ஒரு முடிவேயில்லை போலத் தோன்றியது.
திடீரென்று ஒரு குரல் கேட்டது. அது தீனமான துயரக் குரலாகத் தொனித்தது. வானதிக்கு ரோமாஞ்சனம் உண்டாயிற்று; உடம்பு நடுங்கியது. அவளுடைய கால்கள் நின்ற இடத்திலேயே நின்றன."


அவள் பரிசாக குடுத்த புத்தகத்தை படிப்பதை நிறுத்தி விட்டு ஜன்னல் வழியே பார்த்தேன். ஸ்ரீரெங்கம் ரயில் நிலையத்தை ரயில் தண்டி கொண்டு இருந்தது. அப்பொழுதிருந்து ரயிலை விட்டு இறங்கும் முன்பு வரை அவளை காணவில்லை.

(-)

அவளோடுயான நட்பை என்னால் ரயில் சிநேகமாக கருத முடியவில்லை. அவள் என்னை தேடி வருவாள் என்று காத்து கொண்டுயிருந்தேன்.

நொடிகள் நிமிடங்களானது. ரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது. திருச்சி காற்றை சுவாசித்த பிறகும் என் மனதில் அமைதி தோன்றவில்லை.

காத்து இருப்பது வீண் என்று தோன்றவே சப்-வே நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்பொழுது

"ஹாய்... மகேஷ் இதிலைய வந்த..... பஸ் ல போறேன்ன்னு சொன்னே ??"

(-)

என்னை நானே வெறுத்தேன். அஞ்சினேன் வாழ்வில் முதன் முறையாக தோற்று விடுவோமோ என்ற பயத்தில் உணர்வுகள் தடுமாறியது.

ஸ்வீட் வாங்கி வா என்று அம்மா சொன்னது நினைவுக்கு வரவே.

டிக்கெட் கவுன்ட்டர் எதிரே உள்ள அடையாறு அனந்த பவனுக்கு போய் ஏதோ பெயர்களை சொல்லி, பணத்தை கட்டிய பிறகு தன கவனித்தேன். எப்படி வாங்கினேன் என்று தெரியவில்லை. அத்தனையும் எனக்கு பிடிக்காத ஸ்வீட்கள்; அவளுக்கு பிடித்தவை. அந்த அளவுக்கு மனதில் அவளிருந்தாள்.

தொடரும்....

13 comments:

வால்பையன் said...

அருமை!

வால்பையன் said...

அடுத்த பதிவு எப்போவென்று ஏங்க வைக்கிறது!

டாக்டர்.விஜய் said...

//குருவே....அட்டகாசமாக இருந்திச்சி ;)))//

பயமோகன் said...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள், தொடர் வாசகனாக மாற்றி விட்டீர்கள்.

பஸ்.ரா. said...

//அடுத்து எப்பொழுது????//

பாரு நிவேதிதா said...

//மீண்டும் அடுத்த பல கதை களை எதிர்பார்க்கிறோம்//

paani said...

Unga Narration-a adicchikka mudiyaadhu!!
Rock on!! :-)

majaatha said...

Very interesting and created an itch to read the next part at the end. Expecting more from you Mayee. Keep it up :-)

ஹேமா said...

மேவீ கதை அருமை.அடுத்த பதிவை எதிர்பார்க்க வைக்கிறது.கதை ஓட்டம் காதல் வர்ணணனை எல்லாமே சுவாரஸ்யம்.என்ன...எழுத்துப்
பிழைகள் திருந்தினால் நல்லது மேவீ.அடுத்த தொடருக்காகக் காத்திருக்கிறோம்.

Anonymous said...

அருமை! அடுத்த பதிவை எதிர்பார்க்க

வைக்கிறது

கார்த்திகைப் பாண்டியன் said...

சின்ன சின்னதா எழுதி இருக்கிற ஸ்டைல் நல்லாயிருக்கு.. தொடருங்க

thiyaa said...

அருமை யான பதிவு
நல்வாழ்த்துகள்

மேவி... said...

@ anani : thanks


@ vaals : spl thanks... antha writer kkum sollirunga


@ hema : thanks hema

@ karthi, maha, thiya pena : thanks

Related Posts with Thumbnails