Pages

Tuesday, July 14, 2009

புதிய முகம் - சில உண்மைகள்

என்மேல் அன்பு கொண்டு விசாரித்த அணைத்து வலை உலக நண்பர்களுக்கும் நன்றி. கொஞ்சம் சந்தோசம் ; கொஞ்சம் குழப்பம் என்று இருக்கிறது என் நிலை. என்ன செய்வது .......
பாரதி கூறியது போல் "இன்று புதிதாய் பிறந்தேன்" என்று நினைத்து கொண்டு தான் அணைத்து பதிவுகளையும் அழித்து விட்டேன். புதிய நம்பிக்கைகள் உடன் இன்று முதல் வாழ வழி தேட போகிறேன்.
ஓர் முடிவில் ஒரு துடக்கம் இருக்கும் என்று சொல்வார்கள். முடிவு பார்த்து விட்டேன். இனி துடக்கம் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
நேற்று இரவு ..... குழம்பிய நிலை
காலை சற்று தெளிந்த நிலை .....
ஆனால் தொடர ; அந்த மனநிலையில் இருக்க
சற்று கஷ்டமாக இருக்கிறது ........
புதிய ஒற்றை பெற வேண்டுமானால் ; பழையதை ஒற்றை இழக்க வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது இந்த உலகின் வீதிகளில். அனுபவங்களில் நான் நிறைய இழந்து விட்டேன் ...... நான் இழப்பதற்கு என்னிடம் என் பதிவுகளே இருந்தது ; ஆனாலும் அவை எனக்கு சொந்தமானது இல்லை ..... வாசிப்பவார்களுக்கே அது சொந்தம் என்று எனக்கு தெரியும்.

இருந்தாலும் அழிந்து விட்டேன். இதை பற்றி நான் சற்று யோசித்தாலும் ; அவை ஓர் விசித்திர மன நிலையை குறிக்கிறது. தமிழ்யில் இது எல்லாம் சகஜம் தானே. ஒருவர் வாழ்வில் அவருக்கு நேர்ந்த அனுபவங்களை வைத்து அவை கூற பட்டவை என்றாலும் ; பெரும்பாலும் பழமொழிகள் பலர் வாழ்வுக்கு பொருந்துவது இல்லை ; ஏதோ ஒரு சிலருக்கு தான் ஒற்று போகிறது. இருந்தாலும் சமுதாய மேம்பாட்டுக்கு என்று கூறி தனிப்பட்ட முறையில் மனிதர்களின் உணர்வுகளை மதிக்காமல் பின்பற்றுவது தான் இந்த பழமொழிகள்.

எனக்கும் இந்த பழமொழிகளுக்கும் ஒத்து போவாது. ஹ்ம்ம் . நேற்று வரையில் துங்கினால் காலையில் இறந்து தான் போய் இருப்பேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் இன்று முதல் உயிருடன் இருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது என்ற நம்பிக்கை என்னிடம் பிறக்க வில்லை ; பெரும் மன பிரளயத்திற்கு பிறகு மனதை ஒரு பக்குவ பட்ட நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறேன்.

என்ன செய்ய ; பிறந்து விட்டேன் ; வாழ்ந்தாக வேண்டும் ...... அதனால் தான் இந்த மாற்றம். இன்னும் அந்த குழந்தை தனம் அப்படியே தான் இருக்கு .... மொக்கை தனமும் .

4 comments:

வால்பையன் said...

என்னய்யா நடக்குது!

அப்துல்மாலிக் said...

//வால்பையன் said...
என்னய்யா நடக்குது!
//

அதானே ஹெ ஹெ, ஒரே குழப்பமப்பா

வினோத் கெளதம் said...

நீங்க சீரியஸ்சா சொல்றிங்களா இல்ல விளையாட்டா சொல்லிரங்கலனு ..
இருந்தாலும் எல்லாவற்றையும் தைரியமா எதிர்க்கொள்ளுங்கள்..

ஹேமா said...

மேவி,இப்படித் திடீர் முடிவு....?உங்கள் பழைய பதிவுகள் சில அருமையானவை.பத்திரப்படுத்துங்கள்.வேறு என்ன சொல்ல.மீண்டும் பிறந்ததற்காய் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.சந்திப்போம்.

Related Posts with Thumbnails